

பெர்லினில் உள்ள போட் மியூசியத்திலிருந்து 100 கிலோ எடை கொண்ட அரிய தங்க நாணயம் களவாடப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்களாகும், இது 53 செமீ (21 அங்குலங்கள்) அகலமும், 3 செமீ அடர்த்தியும் கொண்டது, இதில் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபத் படம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு 1 மில்லியன் டாலர்கள் என்றாலும் சந்தை மதிப்பு சுமார் 4 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருடர்கள் மியூசியத்திற்கு அருகில் இருக்கும் ரயில்வே இருப்புப் பாதை அருகே இருந்த ஏணியைப் பயன்படுத்தி அதிகாலை 3.30 மணியளவில் மியூஸியத்திற்குள் புகுந்திருக்கலாம் என்று ஜெர்மனி போலீஸார் கூறுகின்றனர்.
இப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்ததால் புறநகர் ரயில்சேவைகள் சில மணி நேரங்களுக்கு பாதிக்கப்பட்டது. போட் மியூஸியம், ஜெர்மன் தலைநகரின் யுனெஸ்கோ பட்டியலில் உள்ள மியூசியம் தீவில் உள்ளது, உலகின் மிகப்பெரிய நாணய சேகரிப்பு இடமாகும் இது.
இங்கு சுமார் பண்டைய கிரேக்கத்தைச் சேர்ந்த சுமார் 102,000 நாணயங்களும், பழைய ரோமன் நாணயங்கள் 50,000-மும் உள்ளன.