

விசா தடை செய்யப்பட்ட ஆறு முஸ்லிம் நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்க புதிய நிபந்ததனையை அமெரிக்க அரசு விதித்துள்ளது.
அமெரிக்காவால் விசா விண்ணபிக்க தடை செய்யப்பட்ட இரான், ஈராக், ஏமன், சோமாலியா, லிபியா, சூடான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு புதிய நிபந்தனைகளை ட்ரம்ப் அரசு விதித்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தடை விதிக்கப்பட்டுள்ள ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் ( அத்தை, மாமா, பேரக் குழந்தைகள், வருங்கால கணவர், வருங்கால மனைவி, அம்மா, அப்பா) அமெரிக்காவில் தங்கியிருந்தால் அதனை உறுதி செய்த பிறகு அவர்களுக்கு விசா அளிக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கடந்த ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். இதனால் வாஷிங்டன், நியூயார்க் உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. சுமார் 60 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.
அதிபரின் உத்தரவை எதிர்த்து பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசு தனது விசா தடை உத்தரவில் திருத்தம் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.