

ஈரான் நாட்டில் சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலக முழுவதும் இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமாக விளையாடப்படும் ‘போகிமான் கோ’ விளையாட்டுக்கு ஆதரவு எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு எதிர்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
அமெரிக்க போன்ற நாடுகளில் ‘போகிமான் கோ’ விளையாட்டை சாலைகளில் விளையாடி கொண்டிருக்கும் போது சுடப்பட்டு உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஈரான் அரசு போகிமான் கோ விளையாட்டால் சாலைகளில் விபத்துகள் ஏற்படலாம். இதனால் நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு என்று கூறி 'போகிமான் கோ ' விளையாட்டுக்கு தடை விதித்துள்ளது.