Last Updated : 09 Sep, 2016 09:36 AM

 

Published : 09 Sep 2016 09:36 AM
Last Updated : 09 Sep 2016 09:36 AM

தீவிரவாதிகளை ஆதரிக்க கூடாது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தங்களுக்கு நல்லது செய்பவர்கள் என்ற அடிப்படையில் தீவிரவாதி களுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது:

பாகிஸ்தானுடன் அமெரிக்கா வலுவான இருதரப்பு உறவைக் கொண்டுள்ளது. ஆனால், தீவிர வாதத்துக்கு எதிரான நடவடிக் கையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்பதை பாகிஸ் தானிடம் தெளிவாகக் கூறி உள்ளோம். குறிப்பாக தங்களுக்கு நல்லது செய்பவர்கள் என்ற அடிப்படையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் மண்ணில் இருந்து கொண்டு அண்டை நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் தீவிரவாதிகளையும் இலக்காக கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார சாலை திட்டத்துக்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது கூறியிருப்பதில் உண்மை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல் படும் ஹக்கானி தீவிரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் பல் வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த 2008-ல் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்திய தாக்குதலில் 58 பேர் கொல்லப்பட்டனர். எனினும், இந்த அமைப்பின் மீது பாகிஸ்தான் நட வடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x