

வெனிசூலாவில் அதிபர் மதுரோ நிக்கோலஸுக்கு எதிராக நடை பெறும் போராட்டங்களில் இது வரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
தென்அமெரிக்கா நாடான வெனிசூலா, ஸ்பெயின் ஆட்சி யின் கீழ் இருந்தது. கடந்த 1810 ஏப்ரலில் அங்கு மக்கள் புரட்சி வெடித்து நாடு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு 207 ஆண்டுகள் கழித்து தற்போது வெனிசூலாவில் அரசுக்கு எதிராக மீண்டும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது.
எண்ணெய் வளமிக்க வெனிசூலாவில் 82 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர். உணவு, மருந்து, அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப் பாடு நிலவுகிறது. வேலைவாய்ப் பின்மை, பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
தற்போதைய அதிபர் மதுரோ நிக்கோலஸ் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அவர் பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தலைநகர் கராகஸில் எதிர்க் கட்சியினரும் பொதுமக்களும் சாலை, தெருக்களில் பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தி வரு கின்றனர். பல இடங்களில் பாது காப்புப் படையினருக்கும் போராட் டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பேர் பலியாகி உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு நிலைமை கைமீறிச் செல்வதால் அந்த நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.