

தென்சீனக் கடலில் ராணுவ நடவடிக்கைகளுக்காக செயற்கை தீவுகளை உருவாக்கவில்லை. மக்கள் பயன்பாட்டுக்காகவே அவற்றை அமைத்துள்ளோம் என்று சீன பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.
தென் சீனக் கடல் முழுவதை யும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அங்கு செயற்கை தீவு களை அமைத்து விமானப்படைத் தளத்தையும் அமைத்துள்ளது. மேலும் அந்த தீவுகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப் படுத்தும் வகையில் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
5 நாள் சுற்றுப்பயணம்
சீன பிரதமர் லீ கெகியாங் தற்போது ஆஸ்திரேலியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். சிட்னி நகரில் நேற்று அவர் அந்த நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல்லை சந்தித்துப் பேசினார். அதன்பின் லீ கெகியாங் நிருபர்களிடம் கூறியதாவது:
தென் சீனக் கடலில் ராணுவ நடவடிக்கைகளுக்காக செயற்கை தீவுகளை உருவாக்கவில்லை. மக்கள் பயன்பாட்டுக்காகவே அவற்றை அமைத்துள்ளோம். செயற்கை தீவுகளில் சில ராணுவ தளவாடங்கள் உள்ளன. அவை பாதுகாப்புக்காகவே நிறுவப்பட்டுள்ளன.
தென்சீனக் கடலின் பாதுகாப் புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். அங்கு எந்த அசம்பாவிதம் நேரிட்டாலும் சீனாவே முதலில் பாதிக்கப்படும். எனவே பாதுகாப்பு விஷயத் தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.