

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை பதவியேற்கிறார். இதை யொட்டி பதவியேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்காக வாஷிங் டனில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் குவிந்து வருகின்றனர்.
அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 45-வது அதிபராக நாளை அவர் பதவியேற்கிறார். முன்னாள் அதிபர் அபிரஹாம் லிங்கன் முதன்முறையாக பதவியேற்ற போது பயன்படுத்திய பைபிளை யும், சிறு வயது முதல் தான் பயன்படுத்தி வரும் பைபிளை யும் ஆணையாக கொண்டு ட்ரம்ப் பதவியேற்கிறார்.
பள்ளி பருவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது 1955, ஜூன் 12-ம் தேதி அன்று குழந்தைகள் தினத்துக்காக அந்த பைபிளை ட்ரம்புக்கு அவரது தாயார் பரிசாக வழங்கினார்.
பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் முறைப்படி நாளை தொடங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இவ்விழா தொடங்குகிறது. இதையொட்டி வாஷிங்டனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர் கள் குவிந்து வருகின்றனர். அசம் பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடு களும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள பராக் ஒபாமா நேற்று முன்தினம் விழா ஏற்பாடுகளை மேற்பார்வை யிட்டார். இதற்கிடையே வாஷிங் டனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அடுக்கடுக்கான விழாக்களை நடத்தி வருகின்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க நேஷ னல் மாலில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. அங்குள்ள லிங்கன் நினைவிடத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர ராணுவ வாத்தியங்களின் இசை கச்சேரியும், பிரபல வாணவேடிக்கை நிபுணர் குருசியின் வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.