

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிக்கி 11 பேர் பலியாயினர். மேலும் 21 பேரைக் காணவில்லை.
வெள்ளம் காரணமாக ஐவேட் மாகாணத்தின் ஐவைசுமி நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு காப்பகத்தை ஆற்று வெள்ளம் சூழ்ந்ததில் அதில் இருந்த 9 பேர் பலியாயினர். மேலும் 18 பேரைக் காணவில்லை.
இதுபோல ஹொக்கைடோ தீவில் உள்ள ஒரு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டதில் 3 பேரைக் காணவில்லை. இங்கு 2 பேர் பலியாயினர். தீயணைப்புத் துறையினர் காணமல் போனவர் களை மீட்கும் பணியில் ஈடுபட் டுள்ளனர். இதனிடையே, மேலும் ஒரு சூறாவளி உருவாகி இருப்ப தாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.