என்னைக் கைது செய்தது காஷ்மீர் போராட்டங்களுக்கு புத்துணர்வூட்டும்: ஹபீஸ் சயீத்

என்னைக் கைது செய்தது காஷ்மீர் போராட்டங்களுக்கு புத்துணர்வூட்டும்: ஹபீஸ் சயீத்
Updated on
1 min read

மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லாகூர் போலீஸார் அவரை காலவரையற்ற தடுப்புக் காவலில் வைத்தனர். அவருடன் அவரது சகாக்கள் 4 பேரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஹபீஸ் சயீத் கூறியதாவது:

என்னைக் கைது செய்யும் உத்தரவு இஸ்லாமாபாத்திலிருந்து எடுக்கப்படவில்லை, வாஷிங்டனில் எடுக்கப்பட்டது.

என்னைக் கைது செய்துவிட்டால் காஷ்மீர் விடுதலைப் போராட்டங்களை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அவர் முட்டள்களின் சொர்க்கத்தில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னுடைய கைது இந்தியாவுக்கு எதிராக காஷ்மீரிகளின் போராட்டத்துக்கு புத்துணர்வையே அளிக்கும்.

என்னைக் கைது செய்து விட்டால் காஷ்மீரில் அமைதி பிறக்கும் என்று நரேந்திர மோடி நினைத்தால் அது மிகப்பெரிய தவறு.

2017-ம் ஆண்டை காஷ்மீரிகளுக்கான ஒற்றுமை ஆண்டாக அறிவித்துள்ளோம். பிப்ரவரி 5-ம் தேதி திட்டமிடப்பட்ட அனைத்தும் தடையின்றி நடைபெறும்.

இந்தக் கைதை நான் லாகூர் கோர்ட்டில் சந்திப்பேன், இவ்வாறு கூறினார் ஹபீஸ் சயீத்.

ஹபீஸ் சயீத் கைதுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் தலைமையில் எதிர்ப்பு தெரிவித்தன.

இம்ரான் கான் கூறும்போது, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் நெருக்குதலில் இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று சாடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in