தான் படித்த பல்கலைக்கழகத்தில் மார்க் நிகழ்த்திய உரையின் 10 அம்சங்கள்

தான் படித்த பல்கலைக்கழகத்தில் மார்க் நிகழ்த்திய உரையின் 10 அம்சங்கள்
Updated on
1 min read

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார்.

பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக:

1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இப்பொழுது ஹார்வர்டில் பேச வந்திருக்கிறேன் என்றால் நிச்சயம் எதையோ நிகழ்த்தியிருக்கிறேன்.

2. ஹார்வர்டின் ஆகச் சிறந்த நினைவு பிரிசில்லாவை (மனைவி) சந்தித்ததுதான். அப்போதுதான் என்னுடைய இணையதளமான ஃபேஸ்மாஷை நிறுவியிருந்தேன். ஆனால் நான் தோற்கப் போகிறேன் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். என் பெற்றோர் அங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல வந்துவிட்டனர். என் நண்பர்கள் என்னை ஒரு விழாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் என் வாழ்க்கைத்துணையை சந்தித்தேன்.

3. யோசனைகள் எப்போதுமே முழுமையாக உருவாகாது. அதை ஆரம்பித்துப் பணியாற்றினால் மட்டுமே உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். திட்டங்களைத் தொடங்கினால் மட்டும் போதும். மீதத்தை அதுவே பார்த்துக்கொள்ளும். மக்களை இணைப்பது குறித்து முழுமையாக எனக்குத் தெரிந்திருந்தால், நிச்சயமாக நான் ஃபேஸ்புக்கை உருவாக்கி இருக்க மாட்டேன்.

4. கொள்கைகளோடு இருப்பது நல்லதுதான். அதே நேரத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதற்கும் தயாராக இருங்கள். பெரிய திட்டங்களை நோக்கி உழைத்துக் கொண்டிருப்பவர்களை உலகம் விசித்திரமாகப் பார்க்கலாம். நீங்கள் சரியான முடிவை அளித்தாலும் கூட.

5. நமது அமைப்பில் ஏதோ தவறு இருக்கிறது. 10 வருடங்களில் கோடிக்கணக்கான டாலர்களை சம்பாதிக்க முடிபவர்கள் இருக்கும் அதே உலகில்தான், லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் கடனைக் கூடக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

6. ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு கடமைகள், தேவைகள் இருக்கின்றன. முந்தைய தலைமுறைகள் ஓட்டுக்காகவும், சமூக உரிமைகளுக்கும் போராடினர். இந்த காலகட்டம் புதிய சமூக ஒப்பந்தத்துக்கான நேரம்.

7. நம்முடைய திட்டங்கள் உலகளாவிய அளவில் இருக்க வேண்டும். அதைக் கொண்டு மற்றவர்களும் புதிய யோசனைகளைத் தொடங்க முயற்சி செய்ய ஏதுவாக இருக்கவேண்டும்.

8. நாட்டில் ஏழை மக்களுக்கு உதவ ஏராளமானோர் காத்திருக்கின்றனர். ஆனால் பணம் கொடுப்பது மட்டுமே சேவை அல்ல. உங்களின் நேரத்தையும் கொடுக்கலாம்.

9. ஒவ்வொரு தலைமுறையும் தங்களின் நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொண்டே செல்கிறது. நம் தலைமுறையில், இப்போது ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்து வருகிறது. ஆனால் நாம் நிலையிலாத காலத்தில் வாழ்ந்து வருகிறோம்.

10. நம்முடைய நேரத்துக்கான போராட்டம் இது. சர்வாதிகாரம், தனிமைப்படுத்தல் மற்றும் தேசியவாத சக்திகளுக்கு எதிராக உலகளாவிய சமூகத்தினர் செயல்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in