Published : 27 Jan 2017 10:23 AM
Last Updated : 27 Jan 2017 10:23 AM

சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் சுவர்: அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்கா, மெக்ஸிகோ எல்லை யில் தடுப்புச் சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மெக்ஸிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கா னோர் சட்டவிரோதமாக அமெரிக் காவில் குடியேறுகின்றனர். இதை தடுக்க சுமார் 670 மைல் தொலை வுக்கு பல்வேறு வகைகளில் தடுப் புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், இரு நாட்டு எல்லையில் பிரம்மாண்ட சுவர் எழுப்பப்படும் என்று அறிவித்துள் ளார். இதற்கான ஒப்பந்தங்களில் நேற்று முன்தினம் அவர் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ட்ரம்ப் பேசிய போது, எல்லைகள் இல்லையென் றால் அது நாடு இல்லை. எனது ஆட்சிக் காலத்தில் நாட்டின் எல் லைகளில் பாதுகாப்பு அதிகரிக் கப்படும். குறிப்பாக தென்பகுதி எல்லைப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும் என்றார்.

சட்டவிரோதமாக குடியேறிய வர்களை வெளியேற்றுவது தொடர்பான ஒப்பந்தத்திலும் ட்ரம்ப் கையெழுத்திட்டார். சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருவதாகக் கூறப்படு கிறது. அவர்களில் குற்றப் பின் னணி உடையவர்களை அவர் களின் சொந்த நாட்டுக்கு உடனடி யாக திருப்பி அனுப்ப அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற் காக குடியேற்ற துறையில் புதிதாக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக் கவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மெக்ஸிகோ அதிபர் எதிர்ப்பு

மெக்ஸிகோ சுவர் குறித்து செய்தி நிறுவனத்துக்கு ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா, மெக்ஸிகோ எல்லை யில் சுவர் எழுப்புவதற்கான நட வடிக்கைகள் சில மாதங்களில் தொடங்கும். இதற்கான முழு செலவையும் மெக்ஸிகோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மெக்ஸிகோ அதிபர் பெனா நீயடோ கூறியபோது, எல்லையில் சுவர் எழுப்புவதற்கு நாங்கள் பணம் அளிக்க மாட்டோம். அமெரிக்கா வில் வசிக்கும் மெக்ஸிகோ மக்க ளின் நலன்களைப் பாதுகாப் பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

ட்ரம்பின் குடியேற்ற கொள்கை குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி. கமலா ஹாரிஸ் கூறியபோது, குடியேற்றவாசிகளுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. அவர் நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தி வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

ட்ரம்பின் குடியேற்ற கொள்கை களுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல்வேறு இந்திய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கொடூர விசாரணைக்கு ஆதரவு

அதிபர் ட்ரம்ப் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கும் பிணைக்கைதிகள் கொடூர மாக துன்புறுத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். என் னைப் பொறுத்தவரை நெருப்பை நெருப்பால்தான் அணைக்க முடி யும். எனவே ‘வாட்டர்போர்டிங்’ உள்ளிட்ட விசாரணை நடைமுறை களை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x