

சிரியாவில் ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில், பொதுமக்கள் 31 பேர் உயிரிழந்தனர்.
அலெப்போ நகரில் சிரிய ராணுவம் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது முக்கிய சாலை வழியாக சென்ற பேருந்து தாக்குதலுக்கு இலக்கானது. இதில் பொதுமக்கள் உயிரிழந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு 10 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
காஸ்டெல்லா சாலை, கிளர்ச்சியாளர்களால் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இதன்வழியா கவே அவர்களுக்குத் தேவையான பொருட்கள் கிடைக்கின்றன. எனவே இச்சாலையில் சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
நேற்று காலை முதலே நகரின் கிழக்குப் பகுதியில் ராணுவம் தீவிரமான வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில், 21 பொதுமக்கள் உயிரிழந்தனர்.