

பிரிட்டனின் தென் பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த புயல் வீசுகிறது. செயிண்ட் ஜூடு என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலுக்கு இதுவரை இங்கிலாந்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு சுமார் 160 கி.மீ வேகத்தில் பலத்த சூறை காற்று வீசுகிறது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. மின்சார கம்பங்கள் சாய்ந்துள்ளதல் மின்சார விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் கனமழையும் பெய்துவருகிறது. புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனின் ஹீத்ரூ விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தெரிகிறது.
இதே போல் ஜெர்மணி மற்றும் டென்மார்க்கிலும் கடும் புயல் வீசி வருகிறது. புயல் மழைக்கு ஜெர்மணியில் 6 பேரும், டென்மார்கில் 2 பேரும் பலியாகினர்.