வாகன தாக்குதலும் வன்முறையும்: இது முதல்முறை அல்ல

வாகன தாக்குதலும் வன்முறையும்: இது முதல்முறை அல்ல
Updated on
1 min read

வாகனங்கள் பயங்கரவாதிகளின் ஆயுதமாக மாறினால் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுதான் வியாழன் இரவு பிரான்ஸ் வீதிகளில் அரங்கேறிய சம்பவம்.

பிரான்ஸ் நாட்டில் நீஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பேஸ்டைஸ் தினத்தையொட்டி வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மக்கள் திரளாகக் கூடியிருந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் லாரியை அதிவேகமாக செலுத்தியதில் 84 பேர் உடல் நசுங்கி இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் யார் என்ற அடையாளம் தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரத்தை பிரான்ஸ் போலீஸ் இன்னும் வெளியிடவில்லை.

பிரான்ஸில் நடைபெற்ற இக்கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

இது முதல்முறை அல்ல:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நடத்த கார் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் மட்டும் 215 பாலஸ்தீனர்கள், 34 இஸ்ரேலியர்கள், சூடானை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டனர்.

மே 2013 ஆம் ஆண்டு இரு இஸ்லாமியர்கள் லண்டனின் ராணுவ பகுதியில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர்.

18 மாதங்களுக்கு முன்பு புனித போர் (ஜிஹாத்) என்று கூறி கனடாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் குற்றவாளி என 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்காட்லாந்து விமானம் நிலையம் அருகே இரு ஆண்கள் வேனில் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட நபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.

பல வருடங்களாக ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினரே இது போன்ற வாகன தாக்குதல் மூலம் மக்களை கொல்லும் சம்பவங்கள் முன்னெடுக்க காரணமாகி வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in