

சிரியாவில் கோபேன் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கும், குர்திஷ் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே 50 நாட்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் போரில் 1,013 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் கோபேன் (அய்ன் அல் அராப்) நகரை கைப்பற்ற கடும் தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நடத்தி வருகிறது. அவர்களை தடுத்து நிறுத்த குர்திஷ் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 1,013 பேர் கொல்லப்பட்டதாக சிரியா வில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித் துள்ளது. இறந்தவர்களில் 609 பேர் ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் கள், 363 பேர் குர்திஷ் மக்கள் என்று மனித உரிமை அமைப் பின் இயக்குநர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறியுள்ளார்.