Published : 28 Mar 2014 05:08 PM
Last Updated : 28 Mar 2014 05:08 PM

எம்.எச்.370 விமானத்தை தேடும் பகுதி மாற்றம்: ஆஸ்திரேலிய பிரதமர்

மலேசிய விமானம் எம்.எச்.370-ஐ பகுதி நம்பகமான புதிய ஆதாரங்களை கொண்டு மாற்றப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறியுள்ளார்.

இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதி மாற்றபட்டுள்ளது. தற்போது 1100 கீ.மீ. வடக்கில் தேடும் பணி தொடங்கி உள்ளது இங்கு நம்பகமான புதிய ஆதாரங்கள் கிடைத்து உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

நேற்று வரை தேடப்பட்டு வந்த பெர்த் கடல்பரப்பிலிருந்து 1100 கீ.மீ வடக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த இடத்தில் நம்பகமிக்க ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

மலேசிய விமானம் எம்.எச் 370 முன்பு யூகிக்கப்பட்டதை விட வேகமாக பயணத்திருக்கலாம், இதனால் எரிபொருள் விரையாமாகி தேடப்பட்டுவந்த பெர்த்திலிருந்து 1,850 கீ.மீ தொலைவில் விமானம் விழுந்திருக்கலாம் என்று சில ஆய்வுகளின் மூலம் முடிவிற்கு வந்திருக்கிறோம். என்று அவர் கூறியுள்ளார்.

புதிய தேடும் பகுதியில் 122 பாகங்கள் மிதப்பது போலான பிரான்ஸ் செயற்கைகோள் படமும் இதனுடம் ஒத்து போவதால் தற்போது தேடலில் சிறிது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஏனினும் இந்திய பெருங்கடல் பகுதில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதாலும் வானிலை மாற்றத்தால் இருள் சூழ்வதாலும் தேடலில் சிரமம் ஏற்படுகிறது. பெரும் சவால்களையும் தாண்டி தற்போது புதிய தேடல் பணியில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் 11 விமானங்களும், 5 கப்பல்களும் ஈடுப்பட்டுள்ளது.

எம்.எச் விமானம் மாயமாக மூன்று வார காலமாகி உள்ள நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியின் மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது. கருப்பு பெட்டியிலிருந்து வெளிவரும் சிக்னலை கண்டறியும் ப்ளுபின் - 21 உபகரணம் தற்போது பயன்ப்படுத்தப்பட்டு வருகிறது.கருப்புப் பெட்டி கிடைத்தால் விமானியின் ஒலிப் பதிவு மற்றும் விமான பயன்பாட்டின் பதிவு தரவுகள் கிடைத்திவிடும்.

ஆனால் கருப்புப் பெட்டியின் சிக்னலையும் இதுவரை கணிக்கமுடியவில்லை.கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாதத்தில் செயலிழந்து விடும் என்பதால் இந்த தேடலில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

போயிங் நிறுவனம் மீது வழக்கு

இந்நிலையில் பாதிக்கப்பட்டோர்களின் சார்பாக அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில், தனியார் சட்ட ஆலோசனை நிறுவனம் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள் சிக்கியிருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் வழக்கு தொடர அந்நிறுவனம் முன்வந்துள்ளது. விமானத்தை தயாரித்த போயிங் நிறுவனத்திற்கும், விமானத்தை ஆபரேட் செய்த மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கும் எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது.

ஒவ்வொரு பயணிக்கும் பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.இந்திய பெருங்கடலில் விமானம் நொருங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் கடல்பறப்பை கண்டறிவதில் மிகுந்து சிரமம் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x