இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு இல்லை

இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு இல்லை
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் இடையே இதுவரை எந்த ஒரு சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

18-வது சார்க் உச்சி மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடைபெறுகிறது. இந்நிலையில் சார்க் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா - பாகிஸ்தான் பிரதமர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இதுவரை அப்படி ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பாகிஸ்தான் அரசிடம் இருந்தும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் அத்துமீறல்களாலும், பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாலும் தடைபட்டது என்பது குறிப்பிடத்தகக்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in