இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா. சபை தவறு இழைத்துவிட்டது: பான் கி-மூன் ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது ஐ.நா. சபை தவறு இழைத்துவிட்டது: பான் கி-மூன் ஒப்புதல்
Updated on
1 min read

இலங்கை இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா. தவறு இழைத்துவிட் டது. ஐ.நா.வின் பிரதிநிதிகள் முறை யாக செயல்பட்டிருந்தால் அதிக உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்கள் பயணமாக கடந்த 31-ம் தேதி இரவு இலங்கை தலைநகர் கொழும்புக்கு பான் கி-மூன் சென்றார். அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை நேற்றுமுன்தினம் அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது சிறிசேனா கூறிய போது, நீண்டகால போரில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளோம். அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது காலஅவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.

பான் கி-மூன் கூறியபோது, மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கேற்ப புதிய அரசு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இச்சந்திப்பு குறித்து பின்னர் நிருபர்களிடம் பேசிய அதிபர் சிறிசேனா, வடக்கு பகுதியில் இன் னும் 3 மாதங்களுக்குள் தமிழர்களின் நிலம் அவர்களிடம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பான் கி- மூன் பேசியதாவது:

உள்நாட்டுப் போரின்போது ஐ.நா. சபை தவறு இழைத்துவிட்டது. எங்களது இலங்கை பிரதி நிதிகள் முறையாக செயல்பட்டிருந் தால் அதிகமான மனித உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். இலங்கை போர் மூலம் ஐ.நா. சபை பல பாடங்களைக் கற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவம் குறைக்கப்பட்டு தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். இன நல்லிணக்கத்தைப் பேண வேண்டும், மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் மூத்த அமைச்சர்களையும் பான் கி-மூன் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து நேற்று அவர் தமிழர் பகுதியான யாழ்ப் பாணத்துக்கு சென்றார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோரை பான் கி-மூன் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே போரின்போது காணாமல் போனவர்களின் உறவி னர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், ராணுவத்திடம் நிலங் களை பறிகொடுத்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் பெருந்திர ளாகக் கூடி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in