கலீதா மீதான ஊழல் வழக்கு: அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு

கலீதா மீதான ஊழல் வழக்கு: அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு
Updated on
1 min read

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான இரு ஊழல் வழக்குகளில், குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணையை நீதிமன்றம் மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஜியா ஆதரவற்றோர் அறக் கட்டளை என்ற பெயரில் போலி அமைப்பை ஏற்படுத்தி சுமார் ரூ.1 கோடியே 67 லட்சம் சொத்து சேர்த்ததாக, கலீதா ஜியா, அவரது மகனும் வங்கதேச தேசிய கட்சியின் மூத்த துணைத் தலைவருமான தாரிக் ரஹ்மான் மற்றும் 4 பேர் மீது வங்கதேச ஊழல் எதிர்ப்பு ஆணையம் கடந்த 2009ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்தது.

இதுபோல கலீதா தனது அதி காரத்தை தவறாகப் பயன்படுத்தி ஜியா அறக்கட்டளையை ஏற்படுத்தி யதாக, கலீதா மற்றும் 3 பேர் மீது ஊழல் எதிர்ப்பு ஆணையம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மற்றொரு வழக்கை பதிவு செய்தது.

இவ்வழக்குகளில் குற்றச் சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது கலீதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “உடல் நலக்குறைவு காரணமாக கலீதா நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. குற்றச்சாட்டு கள் முறைப்படி பதிவு செய்யப் படவேண்டும் என்பதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” என்றார்.

இதற்கு அரசுத் தரப்பு வழக் கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். “கலீதா ஆஜராகாவிட்டாலும் விசாரணையை தொடரலாம்” என்றார் அவர். எனினும் வழக்கு விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதன் மூலம் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை ஊழல் வழக்கு 19-வது முறையாகவும், ஜியா அறக்கட்டளை ஊழல் வழக்கு 10-வது முறையாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in