

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் கொண்டது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர். அவர்களில் தனிநபராக 187 பேர் மட்டும் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி எவரெஸ்டை அடைந்துள்ளனர். ஆனால் குழு வாக யாரும் இந்த சாதனையை படைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய ராணு வத்தைச் சேர்ந்த 14 வீரர்கள் தனித் தனி குழுக்களாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியின்றி சிகரத்தில் ஏறி சாதனை படைக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதில் குன்சாக் டென்டா, ககெல்சங் டோர்ஜி பூட்டியா, கால்டென் பஞ்சூர், சோனம் பூண்ட்சோக் ஆகிய 4 இந்திய வீரர்கள் அடங்கிய குழு ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கடந்த மே 21-ம் தேதி சாதனை படைத்துள்ளது. இது புதிய உலக சாதனையாகும்.