

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியில் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவுச் அமைச்சர் கிளாரி கிளிண்டன் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே போல குடியரசு கட்சியில் தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
இதைத் தொடர்ந்து கிளாரியும், டொனால்டு ட்ரம்ப் துணை அதிபர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வரு கின்றனர்.
குடியரசு கட்சியில் இன்டி யானா மாகாண ஆளுநர் மைக் பென்ஸை துணை அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் தேர்வு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட் டாரங்கள் தெரிவித்துள்ளன.