

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் காவல் நிலையம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குத லில் 18 பேர் உயிரிழந்தனர்.
முதலில் கார் குண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அடுத்து காவல் நிலையத்துக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 7 பேரும் வெடிகுண்டுகளை உடலில் கட்டியிருந் தனர். இறுதியாக அவற்றையும் வெடிக்கச் செய்தனர்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலின்போது போலீஸாரும் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 10 போலீஸாரும் ஒரு மாணவரும் பலியாயினர். பயங்கரவாதிகள் 7 பேரும் உடல் சிதறி உயிரிழந்த னர். 14 போலீஸாரும் பத்திரிகையாளர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.