

புதிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், சுதந்திரத்தையும் நடை முறைப்படுத்த வேண்டும். மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று எகிப்து இடைக்கால அரசுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியதாவது: “தாஹ்ரீர் சதுக்கத்தில் தொடங்கிய (மக்கள் உரிமைக்காக போராடும்) பணி, அதோடு முடிந்து விடக்கூடாது. மக்களுக்கு ஜனநாயக ரீதியான உரிமைகளை அளிப்பது, நியாயமான, நேர்மையான தேர்தலை நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பு இடைக் கால அரசுக்கு உள்ளது.
எகிப்தில் இப்போது மிகவும் முக்கியமான மாற்றங்கள் ஏற் பட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக வாக்கெடுப்பு நடை பெற்றது. இதைத் தொடர்ந்து எகிப்தில் நடைபெறப்போகும் விஷயங்கள்தான், அரசியல், பொருளாதார, சமூக கட்ட மைப்பை உருவாக்கும் தன்மை உடையது” என்றார்.
98 சதவீதம் பேர் ஆதரவு
முகமது மோர்ஸி அதிபராக இருந்தபோது கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தில் முஸ்லிம் மதத்தினருக்கு ஆதர வான பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இதை எதிர்த்து நாடு முழவதும் மதச் சார்பற்றக் கொள்கையை கடைப்பிடிப்பவர்களும், எதிர்க் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். ராணுவப் புரட்சியின் மூலம் மோர்ஸின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இந்நிலையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலை பெற பொது வாக் கெடுப்பு நடத்தப்பட்டது.
புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு 98.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. மொத்தமுள்ள 2 கோடியே 5 லட்சம் வாக்காளர்களில் 38.6 சத வீதம் பேர் தங்களின் வாக்கு களைப் பதிவு செய்தனர்.
இதற்கு முன்பு முகமது மோர்ஸி அதிபராக இருந்தபோது 2012-ம் ஆண்டு நடைபெற்ற அரசியலமைப்புச் சட்டம் தொடர் பான பொது வாக்கெடுப்பில் 32 சதவீதம் பேர் மட்டுமே வாக்க ளித்திருந்தனர்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலும், அதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலும் நடத்தப்படும் என்று இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ராணுவத் தலைமைத் தளபதி எல் – சிசி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.