Last Updated : 21 Nov, 2014 10:14 AM

 

Published : 21 Nov 2014 10:14 AM
Last Updated : 21 Nov 2014 10:14 AM

இலங்கை உணவு விடுதியின் 94 வயது இந்திய காவலாளி காலமானார்

இலங்கையில் உள்ள பிரபல உணவு விடுதியான கல்லி பேஸ் ஹோட்டலின் இந்தியக் காவலாளியான கொட்டரப்பட்டு சட்டு குட்டன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94.

இலங்கையில் உள்ளது கல்லி பேஸ் ஹோட்டல். இது 150 ஆண்டு காலப் பழமை வாய்ந்தது. இது அந்நாட்டின் பிரபல உணவு விடுதியாகும். சுமார் 72 ஆண்டு களாக இந்த உணவு விடுதிக்கு வரும் மக்களுக்கு ஹோட்டலின் கதவுகளைத் திறந்துவிடும் காவ லாளியாக சட்டு குட்டன் பணி யாற்றியுள்ளார்.

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத் தில் இருந்து தன்னுடைய 17வது வயதில் இலங்கையின் தலைமன் னார் பகுதிக்கு வந்திறங்கினார் சட்டு குட்டன். அப்போது அவர் கையில் வெறும் ரூ.25 மட்டுமே இருந்தது. இந்நிலையில், 1942ம் ஆண்டு அந்த உணவு விடுதியில் காவ லாளியாகப் பணிக்குச் சேர்ந்தார். அவரது பணிக்காலத்தில் மவுண்ட்பேட்டன் பிரபு, எலிசபெத் ராணி, ஹிரோஹிடோ அரசர், ரிச்சர்ட் நிக்சன், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி எனப் பல பிரபலங்களுக்கு இவர் சேவையாற்றியுள்ளார்.

தன்னுடைய மீசை மற்றும் உடையில் குத்தியிருக்கும் பதக்கங்கள் ஆகியவற்றின் காரண மாக உலகின் பிரபல பத்திரிகை களில் இவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதன் மூலம், இவர் இலங்கை விருந்தோம்பலின் அடையாளமாகவும் மாறினார்.

முதுமையின் காரணமாக இறந்த இவரின் நினைவாக, அந்த உணவு விடுதியின் ஊழியர்கள் ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x