தென்கொரியா, அமெரிக்கா போர் ஒத்திகை: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை

தென்கொரியா, அமெரிக்கா போர் ஒத்திகை: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை
Updated on
1 min read

வடகொரியாவின் அச்சுறுத்தல் களை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியா, அமெரிக்க ராணுவ வீரர்கள் இணைந்து நேற்று ஒரு வார போர் ஒத்திகையைத் தொடங்கினர்.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. அதைத் தொடர்ந்து அணுஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகளின் சோதனைகளையும் நடத்தி வருகிறது. மேலும் தென்கொரியா மீதும் அமெரிக்கா மீதும் அணுஆயுத போர் தொடுப்போம் என்று அவ்வப்போது மிரட்டலும் விடுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில் வடகொரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து தென்கொரியாவின் பாஜு பகுதியில் நேற்று போர் ஒத்திகையைத் தொடங்கின.

இதில் தென்கொரிய ராணுவத்தைச் சேர்ந்த 75 ஆயிரம் வீரர்களும் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்தப் போர் பயிற்சி ஒரு வாரம் நடைபெற உள்ளது.

கூட்டுப் போர் பயிற்சிக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டு அரசு ஊடகத்தில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் இறையாண் மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று மீண்டும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் நட்பு நாடுகள். எங்களின் பாதுகாப்புக்காக போர் ஒத்திகையை நடத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in