

கிறிஸ்தவர்களும், ரோமன் கத்தோலிக்க தேவாலயமும் தன் பாலினத்தவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புகோர வேண்டும் என்று கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
அர்மேனியாவில் இருந்து நேற்று ரோம் நகருக்கு திரும்பிய போது விமானத்தில் பத்திரிகை யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தன்பாலினத்தவர்களிடம் தேவலாயம் மன்னிப்பு கோர வேண்டும் என ஜெர்மன் ரோமன் கத்தோலிக்க கார்டினல் தெரி வித்த கருத்தை நானும் ஏற்கிறேன். கடந்த காலங்களில் தன்பாலினத்த வர்களை தேவாலயமும் மிக மோசமாக நடத்தின. அவர்களிடம் இனவெறியுடன் நடந்து கொண் டன. எனவே தேவாலயமும், கிறிஸ்தவர்களும் தன்பாலித் தனவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். மேலும் ஏழைகளிடமும், வற்புறுத்தி பணியமர்த்தப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடமும் கூட மன்னிப்பு கோர வேண்டும். ஏராளமான ஆயுதங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதற்காகவும் மன்னிப்பு கோருவது அவசியம்.
தன்பாலின போக்குகள் பாவம் இல்லை. ஆனால் அதன் மீதான அடக்குமுறை தான் பாவகர மானது. எனவே தன்பாலினத்தவர் கள் கண்ணியத்துடனும், கற்புட னும் வாழ முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
வாடிகன் நிர்வாகத்துக்குள் முன்னாள் போப் பெனடிக்டின் தலையீடு இருப்பதாக எழுந்த புகார் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர், ‘‘வாடிகனில் ஒரேயொரு போப் தான். முன்னாள் போப் எந்த விவகாரத்திலும் தலையிடுவதில்லை’’ என்றார்.
போப் பிரான்சிஸின் இந்த கருத்துக்கு தன்பாலினத்தவர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர். எனினும் பாலியல் ஒழுக்கம் பற்றி தெளிவற்ற கருத்து கொண்டவர் போப் பிரான்சிஸ் என கன்சர்வேடிவ் கத்தோலிக்கர்கள் விமர்சித்துள்ளனர்.