வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும் திறன் பெற்றது

வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா நடத்திய இடைமறிப்பு ஏவுகணை சோதனை வெற்றி: 10,000 கி.மீ தூரம் வரை பாயும் திறன் பெற்றது
Updated on
1 min read

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அணுகுண்டு சோதனை யிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை அமெரிக்கா நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தியது. அந் நாட்டின் மார்ஷல் தீவில் இருந்து செலுத்தப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை, கலிபோர்னியாவின் வேன்டென்பெர்க் விமானப் படை தளத்தில் இருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை துல்லியமாக இடைமறித்து தாக்கி அழித்தது.

இந்த வகை ஏவுகணைகள் குறைந்தபட்சம் 5,500 கி.மீ தூரம் செல்லக்கூடியவை. எனினும் ஒரு சில ஏவுகணைகள் 10,000 கி.மீ தூரத்துக்கு மேல் செல்லும் திறன் படைத்தவை. அமெரிக்காவில் இருந்து வடகொரியா 9,000 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதனால் எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவை பாது காக்க முடியும் என பென்டகன் செய்திதொடர்பாளர் கேப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார். அவர், ‘‘வடகொரியாவில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த சோதனை நடத்த வில்லை. நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிக்கவே நடத்தப்பட்டது’’ என்றார்.

அமெரிக்காவின் செனட் சபை உறுப்பினரும், ஆயுத சேவைகள் குழுவின் பிரதிநிதியுமான டேன் சுல்லிவன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு இந்த நாள் மிக முக்கியமானது. வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு சோதனை மூலம் எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும் என்ற தகவலை வடகொரியாவுக்கு நாங்கள் தெளிவாக எடுத்துரைத்து விட்டோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in