குண்டு வெடித்து பாகிஸ்தானில் 11 பேர் பலி: போலீஸாரை குறிவைத்து தாக்குதல்

குண்டு வெடித்து பாகிஸ்தானில் 11 பேர் பலி: போலீஸாரை குறிவைத்து தாக்குதல்
Updated on
1 min read

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு போலீஸ் சோதனைச் சாவடி அருகே நேற்று குண்டு வெடித்ததில் பாதுகாப்புப் படையினர் உட்பட 11 பேர் பலியாயினர்.

இதுகுறித்து காவல் துறையினர் நேற்று கூறியதாவது:

கைபர் பழங்குடியினப் பகுதி யில் ஜம்ருத் என்ற இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. அங்கு நிறுத்தப்பட்டி ருந்த காவல் துறை அதிகாரி நவாப் ஷாவின் வாகனத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.

இந்தத் தாக்குதலில் காவலர், பொதுமக்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 11 பேர் பலியாயினர். இந்தத் தாக்கு தலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

ஆப்கன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கைபர் பகுதி தன்னாட்சி அதிகாரம் பெற்றது ஆகும். பாகிஸ்தான் தீவிர வாதிகளின் புகலிடமாக விளங்கும் அப்பகுதியில் அவர் களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் போரிட்டு வருகின் றனர். இதனால் பாதுகாப்புப் படையினரை தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in