Last Updated : 13 Mar, 2017 01:07 PM

 

Published : 13 Mar 2017 01:07 PM
Last Updated : 13 Mar 2017 01:07 PM

பாகிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு

பாகிஸ்தானில் 19 வருடங்களுக்கு பிறகு தேசிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

பாகிஸ்தானில் நிலவிய நிலையற்ற ஆட்சி மற்றும் ராணுவ ஆட்சியால் கடந்த 19 வருடங்களாக அந்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், சமீப காலமாக பாகிஸ்தானில் நிலவும் நிலையான ஆட்சியின் காரணமாக 6-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அ ந்நாடு முடிவு செய்துள்ளது.

அதன்படி, பாகிஸ்தானின் 6-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் மே மாதம் 25-ம் தேதி முடிவடையும் என்றும் பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிஃப் கஃபுர் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மரியம் அவுரங்கசிப் தலைமையில் நடந்தக் கூட்டத்ததில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் கூறும்போது, "மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்க துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தவுள்ளனர். ஒரு ஊழியருக்கு ஒரு ராணுவ வீரர் என சுமார் 2,00,000 துணை ராணுவ படை வீரர்கள் இதில் பயன்படுத்தப்படவுள்ளனர்" என்றார்.

தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மரியம் அவுரங்கசிப் கூறும்போது, "மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1,18,918 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இது தொடர்பாக போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் மார்ச் 15- ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி முடிவடையும். பின்னர் 10 நாட்கள் இடைவேளை விட்டு இரண்டாவது கட்டம் ஏப்ரல் 25-ம்தேதி தொடங்கி மே 25-ம் தேதி முடிவடையும்.

இந்த கணக்கெடுப்பின்போது, தவறான தகவல்களை அளிக்கும் மக்களுக்கு ஆறுமாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" எனவும் அவர் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x