ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்: தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கனில் அமெரிக்கப் படைகள் வெளியேற  வேண்டும்: தலிபான்கள் எச்சரிக்கை
Updated on
1 min read

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என்று ட்ரம்ப்புக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தலிபான்கள் அமைப்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித், "அமெரிக்கப் படைகள் ஆப்கனில் உள்ளவரை அங்கு அமைதி ஏற்படாது. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைவதே தலிபான்களின் முக்கிய நோக்கம். அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறுவதற்கு நேரம் வந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் ஆப்கனின் வரலாறு, ராணுவப் படைகளின் தோல்வி ஆகியவை பற்றி கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராக கடந்த 20-ம் தேதி ட்ரம்ப் பதவியேற்றார். இந்தநிலையில் தலிபான்களிடமிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுதல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in