தஞ்சம் கோருபவர்கள் உண்மையான அகதிகள் இல்லை: ஆஸ்திரேலியர்கள் கருத்து

தஞ்சம் கோருபவர்கள் உண்மையான அகதிகள் இல்லை: ஆஸ்திரேலியர்கள் கருத்து
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து தஞ்சம் கோருபவர்கள் அனைவரும் உண்மையான அகதிகள் அல்ல; அவர்களிடம் அரசு மிகக் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 59 சதவீத ஆஸ்திரேலியர்கள், “படகில் வந்து தஞ்சம் கோருபவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகள் அல்ல” எனத் தெரிவித்துள்ளனர். இக்கருத்துக் கணிப்பில், தஞ்சம் கோருபவர்கள் உண்மையான அகதி கள்தான் என 30 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். 11 சதவீதம் பேர் இதில் எதையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.

இந்த கருத்துக் கணிப்பு நாடு முழுவதும் ஆயிரம் பேரிடம் ஆன்லைன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடுமைகாட்ட ஆதரவு

தஞ்சம் கோருபவர்களிடம் கடுமையாகச் சோதனை நடத்தும் பிரதமர் டோனி அபோட் அரசாங்கத்தின் முடிவுக்கு 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர், தஞ்சம் கோருபவர்களிடம் கடுமை காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. வயது முதிர்ந்த ஆஸ்திரேலியர்கள், அகதிகள் தொடர்பான அரசின் கடும்நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in