நாமல் ராஜபக்ச மீண்டும் கைது

நாமல் ராஜபக்ச மீண்டும் கைது
Updated on
1 min read

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கொழும்பில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக ராஜபக்சவின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ரக்பி விளையாட்டு வளர்ச்சி நிதிக்காக வசூலிக்கப்பட்ட ரூ.7 கோடி நன்கொடை நாமலின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக கடந்த ஜூலையில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. ஊழல் பணத்தில் ஹேலோகோப் நிறுவன பங்குகளை நாமல் வாங்கியது தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். அந்த வழக்கில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in