உலகம்
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 15 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இன்று காலையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் ஹங்கு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட முல்லா நபி ஹன்பி அமைப்பின் தலைவர் வீட்டினை குறி வைத்து தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் தன் மீது கட்டியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார். இதில், 15 பேர் பலியாகினர்.
இருப்பினும் தாக்குதல் நடந்த போது முல்லா நபி ஹன்பி இயக்கத்தின் தலைவர் அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.
