அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 7,600 விமான சேவைகள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை

அமெரிக்காவை மிரட்டும் பனிப்புயல்: 7,600 விமான சேவைகள் ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை
Updated on
1 min read

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியை பனிப்புயல் தாக்க தொடங்கியுள்ளது. இதன்காரண மாக 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியான வாஷிங்டன் முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும் பனிப்புயல் தாக்கும் என்று அந்த நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு மணிக்கு 60 கி.மீ. வேகத் தில் பனிப்புயல் வீசத் தொடங்கி யது. இதன் பாதிப்பு புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நேற்று 7,600 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ரயில், பஸ் சேவைகளும் ஸ்தம்பித் துள்ளன. அரசு அலுவலகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பள்ளி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், வாஷிங்டனில் நேற்று முதல்முறையாகச் சந்தித்துப் பேசுவதாக இருந்தது. ஆனால் பனிப்புயல் காரணமாக இரு தலைவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. வரும் வெள்ளிக்கிழமை இருவரும் சந்திப்பார்கள் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

3 கோடி மக்களுக்குப் பாதிப்பு

வாஷிங்டன், மாசச்சூசெட்ஸ், கனெக்டிகட், நியூஜெர்ஸி மாகாணங்கள் மற்றும் ஆன் லாங் தீவு உள்ளிட்டவை பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணங்களில் உள்ள வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களின் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்தந்த நகர மேயர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒட்டு மொத்தமாக சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகள், சுரங்கப் பாதைகளில் பனிக்கட்டிகளை அகற்றும் வாகனங்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பனிப்பு யல் வீசத் தொடங்கிய சில மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in