

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளுக்கு அப்பால் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்து, 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரிக்டர் அளவில், 6.5-ஆக பதிவான நிலநடுக்கம், சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் உள்ள படாங் நகரில் இருந்து, 140 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத் துக்குப் பின், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
படாங் நகரில் நேற்று அதி காலை நேரத்தில், நிலநடுக்கம் வெகுவாக உணரப்பட்டது. சில இடங்களில் சிறிது நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டி ருந்தது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
எனினும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. பூகம்ப அதிர்வால், படாங் நகரை ஒட்டி யுள்ள பகுதிகளில் 54 குடியி ருப்புகள் மற்றும் ஒரு மருத்துவ மனை கட்டிடம் சேதமடைந்த தாகவும், 8 பேர் காயமடைந்த தாகவும், பேரிடர் மீட்புத் துறை செய்தித்தொடர்பாளர் சுடோபோ புர்வோ தெரிவித்தார்.
நிலநடுக்கம் காரணமாக, படாங் நகரில் 80 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.