Published : 26 Jun 2016 11:40 AM
Last Updated : 26 Jun 2016 11:40 AM

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில் நாள் முழு வதும் கொட்டித்தீர்த்த கனமழை யால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 23 பேர் பலியாகினர்.

வெள்ளிக்கிழமை அன்று பெய்த கனமழையால் மேற்கு வெர்ஜினியாவில் குறைந்தபட்சம் 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாகாணத் தலைநகர் சார்ல் ஸ்டன் அருகே, எல்க்வியூவில் பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அங்காடி வளாகத்தில் இரவு முழுவதையும் கழிக்க நேர்ந்தது.

வைட் சல்ஃபர் ஸ்பிரிங்ஸ் நகரில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்டன. ஸ்பென்சர் நகரத்திலும் மழை வெள்ள பாதிப்பு கடுமையாக இருந்தது. பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது.

வீடுகளை விட்டு வெளியேறிய வர்களுக்கு தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 8 மாவட்டங்களில், மீட்புக் குழுவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

‘மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரம் பரவலாகவும், மிக மோசமான அளவிலும் உள்ளது. தற்போது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் முழு கவனம் செலுத்திவருகிறோம்’ என, மாகாண ஆளுநர் ஏர்ல் ரே டோம்ப்ளின் கூறினார். சனிக்கிழமை நிலவரப்படி, மழை வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை, 23-ஐ எட்டியுள்ளதாக மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x