

ஐக்கிய அரபு நாடுகளின் எமிரேட்ஸின் துபாய் நகரில் பொதுமக்கள் போக்குவரத்துக்காக டிராம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் டிராம் சேவையை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது.
முதல்கட்டமாக துபாய் நகரில் 10.6 கி.மீ தூரத்துக்கு டிராம் சேவை தொடங்கியுள்ளது. முக்கிய குடியிருப்பு, வர்த்தக பகுதிகள் என 11 இடங்களில் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மின் வயர்கள் மூலம் இந்த டிராம் வண்டிகள் இயங்குகின்றன. தினமும் 27 ஆயிரம் பேர் இதனை பயன்படுத்துவார்கள். பெண்கள், சிறார்களுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 64 கேமராக்கள் டிராம் சேவையை கண்காணிக்கின்றன. பயணிகளின் பாதுகாப்புக்கு 150 போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று துபாய் சாலை போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பட்டத்து இளவரசர் ஷேக் ஹம் தான் பின் முகமது பன் ரஷீத் அல் மக்டோம் இந்த டிராம் சேவையை தொடங்கி வைத்தார்.