ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு: 4 வங்கதேசத்தவர்கள் குற்றவாளிகள்- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு

ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு: 4 வங்கதேசத்தவர்கள் குற்றவாளிகள்- சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

வங்கதேசத்தில் ஐஎஸ் அமைப்பி னர் தாக்குதல் நடத்துவதற்காக, நிதி திரட்டிய புகாரில் நான்கு வங்கதேசத்தவர்கள் குற்றவாளி கள் என சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு சிங் கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு பேர், வங்கதேசத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஆயு தங்கள் வாங்க நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், வரும் 21-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக் கப்பட உள்ளது. இவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் சிங்கப்பூர் டாலர்களும் (சுமார் ரூ.2.4 கோடி) அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த நால்வர் தவிர மேலும் 2 பேர் குற்றம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

குற்றம்சாட்டப்பட்டவர்கள், சிங் கப்பூர் உள்நாட்டு பாதுகாப்பு சட்டப்படி கைது செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் முதல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இக்குழுவின் தலைவராக ரஹ்மான் மிஸானுர் செயல்பட்டுள் ளார். இவர், ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் எப்படி செய்வது என வழிகாட்டியுள்ளார். ஐஎஸ், அல்காய்தா அமைப்பு களுக் கு ஆட்களையும் திரட்டியுள் ளார். கடந்த ஜனவரியில், 26 வங்க தேச தொழிலாளர்களை கைது செய்திருப்பதாக சிங்கப்பூர் தெரிவித்தது. அல்காய்தா, ஐஎஸ் அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அவர்கள் குழு அமைத்திருப்பதாக குற்றம்சாட்டி யது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in