அரிய வகை மீனுக்கு ஒபாமாவின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்

அரிய வகை மீனுக்கு ஒபாமாவின் பெயரை சூட்டிய விஞ்ஞானிகள்
Updated on
1 min read

ஹவாய் தீவுகளின் வடமேற்கு கடல் பரப்பில், கடல்வாழ் உயிரினங்களுக்கான பாதுகாக்கப் பட்ட பகுதி உள்ளது. பபஹனோ மோகுவாகி என்ற பெயரில் கடல்சார் தேசிய நினைவுச் சின்னமாக அமெரிக்கா பராமரித்து வரும், இந்த சர்வதேச பாரம்பரிய முக்கியவத்துவம் வாய்ந்த கடல்பகுதியை அதிபர் ஒபாமா அண்மையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார்.

இதன் மூலம், மொத்தம் 5 லட்சத்து, 82 ஆயிரத்து 578 சதுர மைல்கள் பரப்புடன், உலகிலேயே மிகப் பெரிய கடல்வாழ் உயிரனங்களின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது மாறியுள்ளது.

மிகப் பழமையான பவளப் பாறை கள் உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்களைக் கொண்ட இப்பகுதியை விரிவாக் கம் செய்ததற்கு நன்றியாக, அண்மையில் கண்டறியப்பட்ட அரிய வகை மீன் ஒன்றுக்கு ஒபாமா வின் பெயரை சூட்ட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

குரே அட்டோல் கடல்பகுதியில், 300 அடி ஆழத்தில் கடந்த ஜூன் மாதம் கண்டறியப்பட்ட இந்த மீனின் உடலில் காணப்படும் வண்ண அமைப்பு, அதிபர் ஒபாமாவின் தேர்தல் பிரச்சார குறியீடு போலவே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

ஏற்கெனவே 2002-ம் ஆண்டில் டென்னிசி ஆற்றில் கண்டறியப்பட்ட புதுவகை மீன் ஒன்றுக்கு ஒபாமாவின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in