

சார்க் உள்துறை அமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடை பெறுகிறது. இதில் பங்கேற்பதற் காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.
அவருடன் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரி கள் சென்றுள்ளனர். முதல்முறை யாக பாகிஸ்தான் சென்றுள்ள ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க கோருவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெற்காசிய நாடுகளிடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பை அவர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
இன்றைய மாநாட்டையொட்டி, சார்க் உள்துறை செயலாளர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
பயங்கரவாதம் தவிர, சார்க் நாடுகளிடையே விசா விதிமுறை கள் தளர்வு, போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலை தடுப்பதில் ஒருங்கிணைந்து செயல் படுவது உள்ளிட்ட பிற முக்கிய விவகாரங்கள் குறித்தும் இன்றைய மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது