

மியான்மரின் வடமேற்கில் உள்ள நாகா பகுதியில் தட்டம்மை உள் ளிட்ட தொற்று நோய் பரவி வருவதால் அங்கு தட்டம்மை தடுப்பூசி போடும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து டி.பி. நோயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகா பகுதி நிர் வாக அலுவலக உதவி இயக்குநர் தெய்ன் ஜா கூறியதாவது:
நாகா இனத்தவர்களின் தன் னாட்சி பெற்ற பிராந்தியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தட் டம்மை உள்ளிட்ட இதர தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இத னால், இப்பகுதிக்குட்பட்ட லாஹே, நான்யுன் ஆகிய நகரங்களில் மட்டும் இதுவரை கிடைத்த தகவல்படி 41 பேர் உயிரிழந் துள்ளனர். இதில் பெரும்பாலான வர்கள் குழந்தைகள்.
இதையடுத்து, தலைநகர் நேபிடாவிலிருந்து வந்த பொது சுகாதாரத் துறை தலைமை இயக்குநர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள் ளிட்ட 20 பேர், கடந்த 6-ம் தேதி முதல் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை 600-க் கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
எனினும், மேலும் சுமார் 2,500 பேர் வசிக்கும் சில மலை கிராமங்களுக்குச் செல்வதற்கான சாலை வசதி மிகவும் மோசமாக இருப்பதால், சுகாதாரப் பணியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களே முன்வந்து சாலைகளைச் செப்பனிட்டாலும் மழை பெய்து வருவதால் சாலை கள் சேதமடைகின்றன. இதன் கார ணாக இந்தப் பகுதிகளுக்கு மருத் துவர்கள் குழு சென்று சேர சுமார் 1 வாரத்துக்கு மேல் ஆகிறது.
கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடப்பட்டு வருவதால் இந்த நோய் கட்டுக்குள் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்தபடியாக, டி.பி. நோயைக் கட்டுப்படுத்தவும் சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2015-ல் உலக சுகாதார நிறுவனம், யுனிசெப் ஆகியவை ஒத்துழைப்புடன் 9 மாதம் முதல் 15 வயதுடைய 1.7 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட மியான்மரின் சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. எனினும், அப்போது சில குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் விடுபட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.