

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல் என இந்திய உச்ச நீதிமன்ற அளித்தத் தீர்ப்பையொட்டி, ஐ.நா. இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் பான் கி மூன் கூறும்போது, மண்ணில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் வாழ்வதற்கு சுதந்திரமான சம உரிமைக்கு உரியவர் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹோமோசெக்ஸ், லெஸ்பியன் உள்ளிட்டவற்றில் ஈடுபாடு கொள்வோருக்கு எதிராக செயல்படுவது சரியானது அல்ல என்றும், அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்ட டிசம்பர் 10-ல் தாம் இதுகுறித்து வெளியிட்ட செய்தியையும பான் கி மூன் நினைவுகூர்ந்துள்ளார்.
இதனிடையே, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, உலக நாடுகள் பலவற்றின் மனித உரிமைகள் அமைப்புகள் பலவும் கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.