Last Updated : 06 Aug, 2016 12:36 PM

 

Published : 06 Aug 2016 12:36 PM
Last Updated : 06 Aug 2016 12:36 PM

பிரான்ஸ் மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து: 13 பேர் பலி

பிரான்ஸில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர்; 6 பேர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள ருவான் நகரின் மதுபான விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நள்ளிரவில் தீ விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக பிரன்ஸின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கேசினவோ அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x