

எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்ஸியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
போலீஸ் அதிகாரியை கொலை செய்தது, மேலும் இரு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சித்தது, காவல் நிலையத் தில் சூறையாடியது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் 16 பேர் விடுவிக்கப் பட்டுள்ளனர். தண்டனை பெற்றவர் கள் அனைவரும் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியைச் சேர்ந்த வர்கள். இந்த கொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தெற்கு எகிப்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்தது. பதவி நீக்கப்பட்ட மோர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டுமென்று வலியுறுத்தி அப்போது வன்முறை நிகழ்ந்தது.
எகிப்தில் சுமார் 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி 2011-ம் ஆண்டு வீழ்ந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்ஸி எகிப்து அதிபரானார். எகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற் றார். எனினும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இதனால் அவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப்பட்டது. இதையடுத்து மோர்ஸியின் முஸ் லிம் சகோதரத்துவ கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர். அது தொடர்பான வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.