

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுடன் இணைந்து கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்தியா ‘மலபார்’ எனும் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஜப்பானும் கடந்த 2007-ம் ஆண்டு முதல் இணைந்தது. இதையடுத்து, இந்தப் பயிற்சியின் பரப்பு மேற்கு பசிபிக் முதல் இந்திய பெருங்கடல் வரை விரிவடைந்தது.
இதற்கு சீனா கடந்த ஆண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சீனாவைக் குறிவைத்து இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுவ தாகக் கூறியது. ஆசிய - பசிபிக் பகுதிகளில் அமெரிக்கா தனது அதிகாரத்தை மறுசீரமைப்பு செய்யும் செயல் எனக் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், வங்காள விரிகுடாவில் வரும் ஜூலை மாதம் கடற்படை பயிற்சியில் ஈடுபட ஆஸ்திரேலியா விடுத்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதை சீனா வரவேற்றுள்ளது. இதுபோன்ற கடற்படை பயிற்சியால் மற்ற நாடுகளின் பாதுகாப்பு பற்றிய கவலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் துறை துணை இயக்குநர் குவா சுன்யுங் கூறுகையில், “ஆஸ்திரேலியா வின் அழைப்பை இந்தியா மறுத்தது தொடர்பான அறிக்கையை நான் பார்த்தேன். இந்த நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள கருத்தை இந்தியா தெளிவாகக் உணர்த்துகிறது” என்றார்.