

பொலியாவில் உள்துறை இணை அமைச்சராக இருந்தவர் ருடால்போ இலானெஸ். இவர், சுரங்கச் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுரங்கத் தொழிலாளர்களுடன் சமரசம் பேசுவதற்காக பண்டுரோ பகுதிக்குச் சென்றார். அப்போது, அமைச்சரைக் காவலர்களுடன் சேர்த்துக் கடத்திய சுரங்கத் தொழிலாளர்கள் அவரை அடித்துக் கொலை செய்தனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வர்களால் அமைச்சர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைப் பாதுகாப்பு அமைச்சர் ரேய்மி பெரைரா உறுதி செய்துள்ளார். “இது மிகவும் கோழைத்தனமான, கொடூரமான கொலை” என அமைச்சர் காஸ்லோஸ் ரொமாரியோ தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில், 2 போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.