

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளுக்கு அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவுடன் அமைதியை கடைப்பிடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் இதனை பலவீனமாக இந்தியா கருதக்கூடாது. எல்லையில் இந்திய ராணுவம் அடிக்கடி அத்துமீறுகிறது என்று அவர் தெரிவித்தார். சமீபத்தில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ள சூழ்நிலையில், பேச்சு நடத்த பாகிஸ்தான் விரும்பம் தெரிவித்துள்ளது.