Last Updated : 08 Jul, 2016 10:19 AM

 

Published : 08 Jul 2016 10:19 AM
Last Updated : 08 Jul 2016 10:19 AM

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு 10 பேர் பரிசீலனை: குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தகவல்

துணை அதிபர் பதவிக்கு 10 நபர் களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட உள்ள டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “துணை அதிபர் பதவிக்கு 10 நபர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளேன். இது தொடர்பாக சிலர் என்னை தொடர்புகொண்டு பேசினர். துணை அதிபர் பதவிக்கு தங்கள் பெயரையும் பரிசீலிக் குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறேன்” என்றார்.

எனினும், அந்த 10 பேரின் பெயரை வெளியிடவில்லை. ஆனாலும் செனட் உறுப்பினர்கள் ஜோனி எர்ன்ஸ்ட், பாப் கார்கர், ஜெப் செஸன்ஸ், நியூ ஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி உள்ளிட்டோர் ட்ரம்ப் பரிசீலித்து வரும் நபர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜோனி எர்ன்ஸ்டை சந்தித்துப் பேசினேன். அவர் எனக்கு ஆதர வாக உள்ளார். பாப்கார்கரும் என்னை சந்தித்துப் பேசினார் இவர்கள் இருவரும் திறமை யானவர்கள்” என்றார்.

எனினும், துணை அதிபர் பதவிக்கான போட்டியில் தாங்கள் இல்லை என்று ஜோனியும் கார்கரும் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் குடியரசு கட்சியின் மாநாடு க்ளீவ்லேண்டில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக துணை அதிபர் வேட்பாளர் பெயரை ட்ரம்ப் அறிவிப்பார் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x