

பிரிட்டனில் ரூ.504 கோடி மதிப்புள்ள சொத்துத் தகராறு வழக்கில், மனுதாரர் 86 வயது முதியவர் என்பதாலும், அவரால் நீதிமன்றத்துக்கு வர இயலாது என்பதாலும் ஐந்து நட்சத்திர விடுதி தற்காலிக நீதிமன்றமாக செயல்பட்டது.
பிரிட்டனில் ராடிஸ்ஸன் புளூ எட்வர்டியன் விடுதி குழுமங்களின் தலைவர் ஜஸ்மிந்தர் சிங் (62). இவரது தந்தை பால் மொஹிந்தர் சிங்(86). மொஹிந்தர் சிங் சக்கர நாற்காலி உதவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் மொஹிந்தர் சிங் தன் மகன் மீது வழக்கு் தொடுத்துள்ளார். அதில், சீக்கியர்க ளின் ‘மிடாக்ஸரா’ மரபுப்படி தனக்கு உரிய பங்கை அளிக்கவில்லை எனக் கூறி மொஹிந்தர் வழக்கு தொடுத்துள்ளார்.
மொத்தம் ரூ. 4,200 கோடி சொத்து மதிப்பு என்ற போதும், வழக்கு ரூ. 504 கோடி தொடர்புடையது.
விடுதி நிர்வாக இயக்குநர் குழுவில் இருந்து மொஹிந்தர் விடுவிக்கப்பட்டார். இதன் காரணமாகவே, அவர் வழக்கு் தொடுத்துள்ளார். நீதிமன்றத்துக்குச் செல்ல அவர் உடல்நிலை ஒத்து ழைக்காது என்பதால் 5 நட்சத்திர விடுதி தற்காலிக நீதிமன்றமாகச் செயல்பட்டது. நீதிபதி வில்லியம் பிளாக்பர்ன் நட்சத்திர விடுதிக்குச் சென்று வழக்கு விசாரணையை நடத்தி, மொஹிந்தர் சிங்கின் சாட்சி யத்தைப் பதிவு செய்தார்.