

லண்டன் அடுக்குமாடி தீ விபத்தில் காணாமல்போன 28 பேர் உயிரிழந்துவிட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கென்சிங்டன் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 14-ம் தேதி பயங்கர தீ விபத்து நேரிட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு 24 மாடிகள் கொண்டதாகும். அதன் அனைத்து மாடிகளி லும் மோப்ப நாய்கள் உதவியுடன் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 16 பேரின் உடல்கள் மட்டுமே முழுமையாக மீட்கப்பட்டன. இதர 14 பேரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
மேலும் 28 பேரை காணவில்லை என்று அவர்களின் உறவினர்கள் மீட்புப் படையினரிடம் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களாக அவர்களின் உடல் களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
ஆனால் எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. எனவே அந்த 28 பேரும் உயிரிழந்து விட்டதாக நேற்று அறிவிக்கப் பட்டது. அவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.